search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவதூறு கருத்து"

    மாணவி குறித்து அவதூறு கருத்து பரப்பி கொலை மிரட்டல் விடுத்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் மதுசூடியான். இவரது மகன் ரேனியல் (வயது19). இவர் நெல்லையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கும், ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பிளஸ்-1 மாணவிக்கும் பேஸ்புக் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. ஆனால் நாளடைவில் ரேனியலின் பழக்க வழக்கம் பிடிக்காததால் அந்த மாணவி பேஸ்புக்கில் இருந்து அவரை நீக்கினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ரேனியல் அந்த மாணவி குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பியும், கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து மாணவியின் தாய் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் ரேனியலை கைது செய்தனர்.

    திருச்சியில் கடந்த மாதம் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டு குறித்து பேஸ்புக்கில் அவதூறு கருத்து பதிவிட்ட இந்து மக்கள் இயக்க தலைவரை போலீசார் கைது செய்தனர்.
    திருச்சி:

    திருச்சியில் கடந்த மாதம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேசம் காப்போம் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இது குறித்து முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். 

    இது குறித்து எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தாரரும், சமூக ஆர்வலருமான கணேஷ் (42),பொன்மலை போலீசில் புகார் செய்தார். 

    இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் வேலூர் மாவட்டம் தொரப்பாடி பஜனை கோவில் தெருவை சேர்ந்த சக்தி சேனா இந்து மக்கள் இயக்கத்தின் அமைப்பாளர் ராஜகோபாலை இன்று கைது செய்தனர். மேலும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
    மம்தா பானர்ஜி குறித்து பேஸ்புக்கில் அவதூறு கருத்து வெளியிட்ட திரிபுராவின் தலாய் மாவட்டத்தை சேர்ந்த துஷார் சர்மா என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். #MamtaBanerjee #Facebook
    அம்பாசா:

    ரோஹிங்யா அகதிகள் பிரச்சினையில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை விமர்சித்து பேஸ்புக் தளத்தில் அவதூறு கருத்துகள் வெளியிடப்பட்டன. குறிப்பாக மம்தா பானர்ஜிக்கு எதிராக தரக்குறைவான வார்த்தைகள் அதில் பயன்படுத்தப்பட்டு இருந்தது.

    கடந்த ஏப்ரல் மாதம் பெரும் சர்ச்சையை கிளப்பிய இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு வங்காள போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இந்த பதிவை திரிபுரா மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் வெளியிட்டது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து இரு மாநில போலீசாரும் இணைந்து அந்த வாலிபரை கைது செய்யும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தினர்.

    இதன் பயனாக திரிபுராவின் தலாய் மாவட்டத்தை சேர்ந்த துஷார் சர்மா என்ற அந்த வாலிபர் தற்போது போலீசாரிடம் சிக்கியுள்ளார். அவரை கைது செய்து கமல்பூரில் உள்ள கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, துஷார் சர்மாவை 3 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.  #MamtaBanerjee #Facebook
    பெண் பத்திரிகையாளர் பற்றி அவதூறு கருத்துக்களை பதிவிட்டதை கண்டித்து தொடரப்பட்ட வழக்கில் எஸ்.வி.சேகர் அடுத்த மாதம் கரூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. #SVeShekher
    கரூர்:

    பா.ஜ.க. பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதனை கண்டித்து பல்வேறு தரப்பினரும் வழக்குகள் தொடர்ந்தனர். இந்திய குடியரசு கட்சியின் (அத்வாலே) மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் கரூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு 2-ல் வழக்கு தொடர்ந்தார்.

    கடந்த சில மாதங்களாக இந்த வழக்கு கரூர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்த வழக்குகள் சம்பந்தமாக 6 வாரத்திற்கு கோர்ட்டில் ஆஜராகுவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று எஸ்.வி.சேகர் தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதனை விசாரித்த நீதிபதி, அவர் 6 வாரம் கோர்ட்டில் ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டார். அதை அவரது வக்கீல் கரூர் கோர்ட்டில் சமர்ப்பித்தார்.

    இந்நிலையில் இன்று கரூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு 2-ல் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சுப்பையா, அடுத்த மாதம் 15-ந்தேதி நடிகர் எஸ்.வி. சேகர் கரூர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார். #SVeShekher
    பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் அம்பத்தூர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் இன்று ஆஜரானார். #SVeShekher
    அம்பத்தூர்:

    நடிகரும், பாரதிய ஜனதா கட்சி பிரமுகருமான எஸ். வி.சேகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    எஸ்.வி.சேகரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நலச்சங்ககத்தின் சார்பில் சேகரன் என்பவர் அம்பத்தூர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு இன்று காலை நீதிபதி அனிதாஆனந்தன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் ஆஜராக நடிகர் எஸ்.வி.சேகர் காலை 11 மணியளவில் அம்பத்தூர் நீதிமன்றத்துக்கு வந்தார். பின்னர் அவர் தனது வக்கீல்களுடன் ஆஜர் ஆனார்.

    அப்போது எஸ்.வி.சேகர் தரப்பு வக்கீல்கள் கூறும் போது, இது தொடர்பாக பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன. அனைத்தையும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரே வழக்காக விசாரிக்க மனு அளித்துள்ளோம் என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (நவம்பர்) 9-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அப்போது மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவின் நகலை தாக்கல் செய்யும்படியும் எஸ்.வி.சேகரை அன்றும் ஆஜராகும்படியும் தெரிவித்தார். #SVeShekher
    ×